சனி, 22 ஆகஸ்ட், 2009

அமானுஷ்யம்

அன்பு நண்பர்களே,
மானுட வாழ்வில் அமானுஷ்யம் என்பது எக்காலத்திலும் உள்ளவை. அவை நாம் கண்டறிந்த தொழில்நுட்ப வசதிகளால் பதிவு செய்ய முற்படும் போது அதில் மறைந்திருக்கும் உண்மைகளை நம்மால் சரிவர உணர முடிவதில்லை.அதில் ஒன்றுதான் கீழே நீங்கள் பார்க்கும் படக்காட்சி.நினைத்தாலே முக்தி அருளும் திருவண்ணாமலை காட்டில் சித்தர் ஒருவர் பறப்பதை படமாக்கி உள்ளனர். பாருங்கள்....( படத்திற்கான சுட்டி இங்கே உள்ளது யு டியூப் ஐ டி உள்ளவர்கள் மட்டும் பார்க்க இயலும் )

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

ஒ இதுதான் காதலா ?


அன்பு நண்பர்களே!
மற்றுமொறு நான் எழுதிய கவிதையிலிருந்து ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.அந்த ஒன்றுதான் காதல்.இந்த உலகத்தில் காதல் வயப்படாதவர்களே இல்லை எனலாம் அல்லவா? நானும் அந்த வலையில் விழுந்தவன் என்று இங்கு கூறினால் அது முழுக்க முழுக்க பொய் என்று ஆணித்தரமாக கூறலாம்.அனால் அந்த நிலையை கடந்து வந்தேன் என்றால் அது ஓரளவிற்கு உண்மை எனலாம்.அச்சூழ்நிலையில் நான் எழுதிய கவிதைதான் இது.பாருங்கள் ஒரு காதல் கடிதத்தை உயிரெழுத்தில் வடித்திருக்கிறேன்.

ருந்தமிழ்க் காவியமே !
னந்த நாட்டியமே !
யம்புகின்றேன் இன்று எனது காதலை
ந்து விடு நாளை நல்ல முடிவை
ன் மனதில் நான் என்று நீ நினைத்தால்
ருக்குத் தெரியாமல் உரைத்துவிடு கடிதத்தில்
ன் மனதில் நீ இல்லை என்று நீ கூறினால்
ன் என்று கேட்க நான்
நா சபையும் அல்ல அரசியல்வாதியும் அல்ல
ருக்கால் நீ இதை ஏற்காவிட்டால்
டிவிடு உன் படிப்பு வீணாகும்
டதம் போலத்தான் வாழ்க்கையும்
அகுதை நினைத்தே இனி என் பயணமும்...........

காதல் செய் !
காதல் மட்டும் செய்யாதே !
இந்த பொன்மொழியுடன் நான் எழுதிய ஒரே ஒரு காதல் கவிதையை எனக்கு என்னவென்றே தெரியாத நான் இன்றுவரை புரிந்து கொள்ள முடியாத காதலுக்கு உங்கள் முன் பணிவன்புடன் சமர்பிக்கிறேன்.
இல்லாத காதலுடன்...........
- அ சதிஷ் குமார்

புதன், 19 ஆகஸ்ட், 2009

நினைவுகள் ( இது கவிதை மாதிரி ஆனா....... )


அன்பு நண்பர்களே !

நினைவுகள் என்றும் அழியாதவை அவை என்றும் பேசுவதில்லை .இரவின் மடியில் நாம் விழித்திருக்கும் போது தென்றலாய் வந்து நம்மைத் தாலாட்டும் .அந்தி மாலைப் பொழுதுகளில் நம் வீட்டு ஜன்னல்களை வெறித்திருக்கும் போது சூன்யமாய் வந்து நமக்குச் சுகம் தரும் .நம் உயிரும் உள்மனதும் உள்ளவரை நினைவுகள் என்றும் அழிவதில்லை . அவை என்றும் பேசுவதும் இல்லை . சில நேரங்களில் அவை எழுத்துக்களில் மிளிரவும் செய்யும் இதோ இந்தக் கவிதையைப் போல..............


அது ஒரு கனாக்காலம்

ஒற்றைக்கால் சட்டை யோடு உலகம் சுற்றி
காடுகளின் காதலனாக
கண்மாய்களின் காவலனாக
களிப்புடன் காலத்தைக் கழித்த காலம் அது !

பள்ளியில் வாத்தியாரின் பிரம்படி வைபவம்
வீட்டில் அப்பாவின் அதிரடி தாண்டவம்
அனைத்தையும் மறந்து வீட்டின் முற்றத்தில் படுத்து
நட்சத்திரங்களை எண்ணி நாள் கழித்த காலம் அது !

வீட்டிலே முக்கனிகள் நிறைந்திருக்க
மாற்றான் தோட்டத்தில் மாங்கனி திருடி
உற்றவன் அறியாமல் மற்றவர்களோடு பகிர்ந்து
மந்தகாசமாய் உண்டு களித்த காலம் அது !

கரியை அரைத்து கரும்பலகையிலிட்டு
வாய்ப்படுகளின் வகை பயின்று வண்ணமயமாய்
வகுப்பில் மிளிர்ந்து - சிந்தனையைச்
சிலேட்டில் கொட்டித் தீர்த்த காலம் அது !

இவற்றை எண்ணி எண்ணி நான் பார்த்திருக்க
எட்டும் எட்டும் பத்தென்று தப்பாய்க்கூட்டி
உயர் அதிகாரியை பயர் அதிகாரியாக வைத்து
என்றும் நான் நினைக்கும் இனிய கனாக்காலம் அது !

ஆம் , அது ஒரு கனாக்காலம் !

நெஞ்சில் தைத்த நினைவு முட்களுடன் ..................
அ சதிஷ் குமார்.


செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

குறிப்பு

நண்பர்களே !
கீழே நீங்கள் படித்த கவிதை ( அட முறைக்காதீங்கப்பா ). சிலருக்கு ஒரு நெகடிவ் விஷயமாக தோன்றலாம். ஆனால் இன்றைய நமது பாரதம் உள்ள சூழ்நிலையில் இச்சிந்தனை சாத்தியமே. என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று இப்பொது பாடத் தோன்றுகிறதல்லவா!

முன்பு வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக இருந்தோம் இப்போது அதில் மாற்றமில்லை
இப்போதும்
வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாகத்தானிருக்கிறோம்! ( நான் வெள்ளை உடை உடுத்தும் சில தரங்கெட்ட அரசியல்வாதிகளை சொல்லலயிங்கோவ், அப்பறம் பின்னாடி யார் பஞ்சராகறது )

இது கவிதை அல்ல ஒரு எளியவனின் ஏக்கம்

என் இதயத்தின் அழுகுரல்

கடவுளே!

எப்போது அழிப்பாய் இந்த உலகத்தை!


«ýÀ¢ý «Õ¨Á ¦¾¡¢Â¡Áø ÁÉ¢¾ ¯ÈÅ¢ý Á¸òÐÅõ Ò¡¢Â¡Áø

Áì¸¨Ç àñÊÅ¢ðÎ §ÅÊ쨸 À¡÷ìÌõ «Ãº¢Âø ºì¾¢¸û!,

«ÏÅ¢ý ºì¾¢¨Â ¾ÅÈ¡ö Ò¡¢óÐ ¾ôÀ¡ð¼õ

¬Îõ º¢Ä ¾È¢¦¸ð¼ ¿¡Î¸û !,


இறையாண்மையை காற்றில் பறக்கவிட்டு

அதிகாரத்தை ஆவர்த்தனம் செய்யும் அதிசயங்கள் !

±Ç¢ÂÅ÷¸Ç¢ý Àº¢ôÀ¢É¢¨Â º¡¾¸Á츢 Á¾ò¾¢ý ¦ÀÂáø

ÁÉ¢¾ò¨¾ þÆ¢×ÀÎòÐõ º¢Ä Áð¸¢ô§À¡É ¦Åð¸î¦ºÂø¸û !


போகும் திசையே தெரியாமல்

எங்கே போகிறது என் பாரதம் !


எளியவன் எளியவனாகவே வாழ்கிறான் !

வலியவன் வலியவனகவே இருக்கிறான்!

இடையில் இருப்பவர்கள் இல்லாமல் போகிறார்கள்!

இருப்பவர்கள் ஏமாற்றுகிறார்கள் !

எஞ்சிய மக்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள் !

எங்கே போகிறது என் பாரதம் !


திரும்பிய திசைகள் எல்லாம் வன்முறைகள் ,வெறிச்செயல்கள்

வந்தேறிகளை வாழவைத்த இத்திருநாட்டில்

தீவிரவாதம் தானாய்த் தலை விரித்து ஆடுகிறது!

தினம் ஒன்றாய் அரங்கேரும் அரசியல் நாடகங்கள்,

பிணத்தினுள்ளும் பணம் தேடும் சில அரசியல் ஓநாய்கள்,


அப்பப்பா !

போதும்! போதும்!

எண்ணைக்கும் தண்ணிக்கும் திண்டாடும்

இப்பூவுலகினைக் காண என்னால் முடியாது!

நிச்சயமாய் முடியாது!


ஆதலால்,


உயிர்கள் இருந்த சுவடு கூட தெரியாமல்

புல்பூண்டைக்கூட மிச்சம் வைக்காமல்

அத்துணையும் அழித்துவிடு

கணப்பொழுதில்!


அதன்பின்,


புத்தம் புது பூமி புதிதாய் பிறக்கட்டும்

மாசில்லா மானுட சமுதாயம் மலரட்டும்.


ஒ கடவுளே!

எப்போது அழிப்பாய் இந்த உலகத்தை!

இபோழுதாவது கேட்கிறதா
என் இதயத்தின் அழுகுரல்!


திங்கள், 17 ஆகஸ்ட், 2009

வணக்கம் அன்பு நண்பர்களே!
பலரின் வேண்டுகோள்களுக்கிணங்க (ஒரு விளம்பரம்......) என் பிளாக்கில் கவிதை எழுதுவது என்று முடிவு செய்துவிட்டேன்.( ஹும் உங்க தலையெழுத்த மாத்த யாரால முடியும்) இதோ!எனது முத்தான முதல் கவிதை(படிச்சுதெளிவாகிடுங்க)

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

நூல் பல கல்.

அன்பு நண்பர்களே!
புத்தகங்கள் நமது ஒப்பற்ற ஆசானாக செயல்படுகின்றன.நல்ல நூல்களே நல்ல நண்பர்கள்.நூல்கள் பல படித்திருந்தாலும் குறிப்பிட்ட சில நூல்கள் மட்டும் நம் நெஞ்சில் நீங்காது இடம் பெற்றுவிடுகின்றன.அந்த வகையில் நான் விரும்பிப்படித்த சில நூல்கலை கீழே கொடுத்துள்ளேன்.
( டாப் டென் வரிசையில் )
புத்தகங்கள்

1.எனது போராட்டம்

( அடல்ப் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு.ஒரு தவறே செய்தாலும் அதை இறுதிவரை கடைபிடித்து வாழ்ந்த மனிதன்.கொடூர செயல்கள் செய்தாலும் செய்வதற்கு ஓர் அசத்திய துணிச்சல்வேண்டுமல்லவா? )

2.அக்கினிச் சிறகுகள்

( அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு.எளிமையின் எடுத்துக்காட்டு. ஒரு ஜனாதிபதி ஆனபோதும் கூட, இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என வாழ்ந்து காட்டிவரும் மனிதருள் சிறந்த மனிதர். இதைச்சொல்ல நமக்கு அருகதை இல்லை என்ற போதிலும் என் மனம் கவர்ந்த மாமேதை )

3.அர்த்த சாஸ்திரம்

( கௌடில்யர் என்ற சாணக்கியர் எழுதிய நீதிநூல்.கலாச்சாரம் சார்ந்த இவரது நீதிக்கொள்கைகள் இன்றைய சூழ்நிலையில் நம் இந்தியாவிற்கு உதவாது என்ற போதிலும் சிறந்த கருத்துக்களைக் கொண்ட நூல் இது )

4.வீடியோ நைட்ஸ் இன் காட்மன்ட் by pico iyar

( பீகோ ஐயர் என்னும் இந்த பயண மனிதர் உலகத்தில் சுற்றாத இடமே இல்லை எனலாம்.அத்தகைய மனிதர் இந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் என்ன நினைக்கிறார்கள் என்று கூறும்போது ச்சே! என்ன கொடுமை சரவணன் இது! என்று கூறத் தோன்றும்.இந்தியர்கள் அனைவரும் படித்து வெட்கப்பட வேண்டிய ( நமக்கு எப்போ அது இருந்திருக்கு ) அருமையான புத்தகம் )

5.ச்சே குவேரா

( லத்தீன் அமெரிக்க நாடுகளில் கம்யுநிச புரட்சியை ஏற்படுத்திய உண்மையான மாவீரன் ச்சே குவேரா. ஜீ ஸ்டுடியோ தொலைக்காட்சியில் தி மோட்டார் சைக்கிள் டைரிஸ் என்ற திரைப்படத்தைப் பார்த்து இப்புத்தகத்தை வாங்கினேன்.படித்ததும் புரிந்தது இந்த மனிதனைப் போல ஓரிருவர் இங்கு இருந்தால் போதும் இந்தியத் திருநாடு சொர்க்க பூமியைத் திகழும் என்று. நம் கண் முன்னே இந்தத் திருமகனின் உருவப் படம் பொறித்த சட்டைகளை அணிந்து கொண்டு அரைகுறையாக இவரைப் பற்றி மேடைகளில் பேசிக்கொண்டு திரியும் சில கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இவரின் பேருக்கே களங்கம் விளைவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை )

6.சிந்து முதல் கங்கை வரை

( இந்நூலை எழுதியவர் ம்ருதுளசான்கித்யயணன் இது முதலில் தேவநகரி எழுத்து வடிவில் வெளிவந்தது. எப்போது தெரியுமா? கி மு ஒன்றாம் நூற்றண்டில்.சுட்ட செங்கற்க்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் இந்தியாவில் முதலில் வெளிவந்த நாவல் ஆகும்.இதைப் படிக்கும் பொழுது இந்த அறிவியல் முன்னேற்றங்களை எல்லாம் விட்டு விட்டு கானகத்தில் வாசம் செய்ய எண்ணம் தோன்றும் என்பது திண்ணம் )

7.சிவா வாக்கியர் பாடல் தொகுப்பு
எல்லா பாடல்களையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.விளக்கம் பெற தேடல் இல்லை.எதோ என்னால் முடிந்த, புரிந்து கொள்ளக்கூடிய பாடல்கள் கீழே

கோவிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே.

வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்கிறீர்
வாயிலே குதப்பு வேதமென படக்கடவதோ
வாயில் எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!

கறந்தபால் முலைப்புகா,கடைந்த வெண்ணை மோர்புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே


8.குடும்பம் ( சீன நாவல் )

9.எட்வர்ட் தாட்சனின் மானுடபண்பாட்டியல்

10.ஆப்பிரிக்கா கண்டம் by மணியன்(இதயம் பேசுகிறது)