வெள்ளி, 29 ஜனவரி, 2010

இசை மேடையில் இன்ப வேளையில்...., - 1

நண்பர்களே!
                           இன்றைய தமிழ் சினிமாவில் இசை அமைப்பது என்பது மிக கொடுமையான விஷயமாக இருந்தாலும் அவ்வப்போது சில விதிவிலக்குகளும் இருக்கின்றன. அந்தவகையில் சுப்ரமணியபுரம் படத்தில் வரும் கண்கள் இரண்டால் என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தபாடல்கள் வரிசையில் சேர்ந்துவிட்டது. அதிலும் அந்த பெண்குரல் இதயத்தை உருகவைக்கும் என்பதே உண்மை, அந்தக்குரல் யாரென்று நீண்ட தேடலுக்கு பின்னர் கண்டுபிடித்தேன். அந்த இனிய குரலுக்கு சொந்தம் தீபா மிரியம் என்ற பாடகி. ஆஹா என்ன ஒரு குரல் வளம், இதே பெண்மணி இதற்க்கு முன்பு வெயில் என்ற படத்தில் உருகுதே என்ற பாடலையும் பாடியுள்ளார். ஆனால் இந்தப் பாடலில் உள்ள  மனோவசியம் அதில் இல்லை. இசை அமைப்பாளர் ஜெம்ஸ்வசந்தனுக்கு நன்றி!
                           ஒரு ஜனவரி மாத காலை வேளையில் தயவு செய்து உங்கள் சுற்றுப்புறத்தை நிசப்தமாக்கிவிட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி கண்களை மூடி B G M இல்லாத கீழே உள்ள இந்த பாடலை கேட்டுப்பாருங்கள். இந்த கந்தர்வ குரலின்
மனோவசியத்தை நீங்களும் உணர்வீர்கள் நிச்சயமாக!
">

இன்னொன்று,

                                            இன்றைய சூழலில் இந்திய அரசு செய்த ஒரு உருப்படியான காரியம் என்னவென்றால், ஒரு இசை மேதைக்கு, இசை ஞானிக்கு, ராக தேவனுக்கு பத்ம  விருதினைக் கொடுத்ததுதான், இந்த விருதுகள் எல்லாம் அவரது திறமைக்கும் இசைப் பணிக்கும் ஈடாகாது என்றாலும் இது அவருக்கு காலம் தாழ்த்தியே வழங்கப்படுகிறது என்பதே உண்மை. இந்த விருதுகள் பாராட்டுக்கள் போன்றவற்றில் நான் மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தேன். ஆனால் நடிகர் விஜய் போன்றோருக்கு எல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தவுடன், விருதுகள் மீது எனக்கிருந்த நம்பிக்கை தகர்ந்து தரை மட்டம் ஆனது. அந்தவகையில் ஒரு திறமையாளரை கௌரவிக்க அவரை அவரது போக்கிலேயே விட்டுவிடலாம் இல்லையா?