2 . கீழ் பவானி வாய்க்கால், பாத்தா சும்மா சைலண்டா இருக்கேனு நினைக்காதாதீங்க ஒரு இருபது அடிக்கு மேல ஆழம் இருக்கும்.
ஞாயிறு, 13 டிசம்பர், 2009
சொர்கமே என்றாலும்.....
2 . கீழ் பவானி வாய்க்கால், பாத்தா சும்மா சைலண்டா இருக்கேனு நினைக்காதாதீங்க ஒரு இருபது அடிக்கு மேல ஆழம் இருக்கும்.
திங்கள், 30 நவம்பர், 2009
தமிழ் சினிமாவின் சாபக்கேடு - விஜய்
ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய் அவர்களின் படங்களுக்கு வரும் வரவேற்பைப் பார்க்கும்போது தாக்கம் இன்னும் திண்ணமாக உள்ளது என்றே தோணுகிறது. அன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்த எம் ஜி ராமச்சந்திரன்,சிவாஜி கணேசன் போன்றோர் தங்கள் படங்களில் சமுதாய நல்லிணக்க கருத்துக்களையும், சுய ஒழுக்கத்தையும் போதித்தனர். மக்களும் அவற்றைப் பார்த்து குறிப்பாக எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் தான் நடித்த ஒரு படத்தில் கூட புகை பிடிப்பது போலவோ மது அருந்துவது போலவோ காட்சிகளை அமைக்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் இன்று அப்படி உள்ளதா சரக்கடிப்பது என்ற விஷயத்தை ஏதோ திரிகால சந்தியாவதனம் செய்வது போல ஒரு சடங்காகவே ஆக்கிவிட்டனர் இன்றைய தமிழ் சினிமாவின் சிற்பிகள். இன்று வரும் ஒரு படத்திலாவது இந்த வார்த்தை இல்லாமல் உள்ளதா?
இதற்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் என்றால் இந்த கேடுகெட்ட படங்களுக்கெல்லாம் மூலம் திருவாளர் விஜய் அவர்களின் படங்களே! நீங்கள் கேட்கலாம் ஏன் மற்ற படங்கள் இல்லையா என்று, அதாவது முன்பு எம் ஜி ஆர் நடித்ததைப் போன்று தானும் சொந்தவாழ்வில் கடைபிடித்து வாழ்ந்தவர்கள் பலர். ஏனென்றால் ஒரு பெரிய இமேஜை கொண்டிருக்கிற ஹீரோக்கள் தமிழ் சினிமாவை மூச்சாக, வாழ்வில் ஓர் அங்கமாக எண்ணும் பல ரசிகர்களையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்தால் இவர்களும் செய்வார்கள். அன்று எம் ஜி ஆர் ஏழைகளுக்கு உதவினார் பலரும் உதவினார்கள். இன்று விஜய் சரக்கடிக்கிறார் பலரும் சரக்கடிக்கிரர்கள். அதற்க்கு ஏற்றது போல இன்று அரசு சரக்காட்சி நடத்துகிறது சரி அதை விடுங்கள். திருவாளர் விஜய் அவர்களின் மற்றுமொரு சகிக்க முடியாத வசனம் என்னவென்றால் " நா கண் அசைச்சா போதும் என் பின்னாடி ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க " என்பது, இதை கைதட்டி அராவரித்து புளகாங்கிதம் அடைகிறது இன்றைய இளைஞர் பட்டாளம், இவர்களின் சொந்த சகோதரிகளும் அந்த ஆயிரம் பெண்களில் அடக்கம் என்பது தெரிந்தும்.இந்த வெட்கக் கேட்டில் அஜித், சிலம்பரசன், இன்னும் பல நடிகர்களும் அடக்கம்.
அது சரி நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இவருக்கு ரவுடி வேஷத்தை விட்டு வேறு எந்த வேஷமும் கிடைக்காதா? இவரின் ஆரம்ப கால படங்கள் முதல் இன்றுவரை வித்தியாசமாக ஏதும் செய்தது கிடையாது. இந்த லட்சணத்தில் இவருக்கு போட்டி வேறு. அஜித் ரசிகர்களும் இவரின் பதாகைகளும் மோதிக்கொள்கின்றன இதைவிட கேவலம் தமிழ் நாட்டிற்கு வேறு ஏதும் வேண்டுமா? இன்னொரு விஷயம் காதல். அடடா இவர் காதலுக்கு செய்கின்ற தியாகம் இருக்கின்றதே அந்த 'ஷாஜகான் மும்தாஜ் ' லைலா மஜ்னு ' இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும். இவரின் உயிரைக் குடுத்தாவது இந்த காதல் *யிரை காப்பாற்றி விடுவார். அழகி, சொல்லமறந்த கதை, ஆடோகிராப், பசங்க, பூ, மல்லி,கஸ்தூரிமான்,இந்தியன், ரோஜா, நாயகன் போன்ற மிகச்சிறந்த உலக திரைப்படங்களுக்கு சவால் விடும் படங்களின் வருகையின் மத்தியில் விஜய்யின் படங்கள் தமிழ் சினிமாவிற்கு ஒரு திருஷ்டிப்பொட்டு.
சனி, 31 அக்டோபர், 2009
சிந்திக்க வைக்கும் விளம்பரம்....?
திங்கள், 12 அக்டோபர், 2009
நெஞ்சு பொருக்குதில்லையே !
சரி நமது இனம்தான், மொழிதான், ஆனால் நாடு வேறு ஆயிற்றே, என்று தமிழ் நாட்டைவிட்டு அங்கே சென்று வசித்தார்களோ அன்றிலிருந்து அது அவர்களுடைய நாடு. அவர்களுடைய உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக இங்கு வந்தார்கள் எனில் அவர்கள் அகதிகள் அதாவது நம் நாட்டு விருந்தினர்கள்.அகதிகளாக வாருங்கள் விருந்தினர்களாக இருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை, இபோதுதான் அங்கு எல்லாம் முடிந்துவிட்டதே திரும்பிச் செல்லலாம் அல்லவா? முதலில் குடியுரிமை கேட்பார்கள் பின்பு இடஒதுக்கீடு,தனித் தொகுதி என்று லிஸ்ட் நீளும். அத்தனையும் செய்துவிட்டு அம்போ என்று இருக்கத்தானே வழிவகை செய்கிறார்கள். அரசியல் செய்யும் அன்பர்கள் முதலில் தமிழக தமிழர்களின் வாழ்க்கையை பாருங்கள் பிறகு இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்க்கலாம். அவனவன் அன்றாட மளிகைப் பொருட்களே கிடைக்காமல் விலைவாசி ஏற்றத்தால் திண்டாடுகின்றான். இந்த லட்சணத்தில் அவர்களுக்கு குடியுரிமை ஒரு கேடா?. எங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஒரு அகதிகள் முகம் உள்ளது. அங்கு உள்ள அகதிகள் சிலர் சாலை மறியல் செய்து எங்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கி அரசுப் பேருந்துகளில் ஓட்டுனராக பணியிலமர்த்தப்பட வேண்டும் என்று போராடினார்களாம். தற்போது நம்மில் எத்தனை பேர் அப்பணியினைப் பெற போராடிக் கொண்டுள்ளனர் என்று நாடறியும். ஏற்கனவே காவிரியில் தண்ணீர் வாங்கித் தருகிறேன் என்று சிலையைத் திறந்து வைத்து மக்களை இனா வானா ஆக்கியது போதாதா? தன் சொந்த வீட்டில் வாய்க்கரிசி போட்டுவிட்டு, விருந்தாளிகளுக்கு உலை வைப்பது என்ன நியாயம். ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் அரசியல் புண்ணியவான்களே ! முதலில் உங்கள் சொந்த வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வளியுங்கள் பின்பு அடுத்தவன் வீட்டைப் பார்க்கலாம்.
( விடியோவிற்கான சுட்டி இங்கே பெண்கள் மற்றும் பலகீன மனம் உள்ளோர் பார்ப்பதைத் தவிர்க்கவும் ) இதைச் சொன்னால் அங்கு நடக்கும் அக்கிரமங்களை விடியோவாக்கிக் காட்டுகிறார்கள். சரி அந்த விடியோவில் இருப்பது தமிழர்கள்தானா? அவர்கள் இலங்கை ரானுவத்தினர்தானா? அப்படியே இருந்தாலும் மறைவாக செய்யாமல் கேமராவை ஓடவிட்டு சுடுவார்களா? இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்க முடியுமா உங்களால். போதுமய்யா தமிழ் தமிழ் என்று வாய்கிழியப் பேசிவிட்டு தன் வீட்டுப் பிள்ளைகளை டெல்லியில் ஹிந்தி பயில வைத்து நாடாளச் செய்து, தமிழ் நாட்டைப் பங்கு போட வைத்து, பதவி ஒதுக்கி பாங்கு செய்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று கறை இல்லாத கர்ம வீரரையே குறை சொன்னபோதும் பார்த்துக்கொண்டிருந்த தமிழக மக்கள் இன்று வரை அறிவிலிகளாக பாமரர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததலிருந்து நாம் காந்தி பிறந்த மண்ணில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்று சந்தேகமாக உள்ளது. தமிழ் வீரம் என்பது அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தி போராடுவதுதானா?
இலங்கைத் தமிழர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உங்கள் சொந்த மண்ணில் வாழ்வதுதான் உங்களுக்குப் பெருமை, அங்கு அனைத்து உரிமைகளையும் பாரபட்சமில்லாமல் பெறுவதுதான் உண்மையான வெற்றி. அதை விடுத்து இங்கே இருக்கும் அரசியல் தொழில் நடத்துபவர்களின் பேச்சைக் கேட்டீர்களானால் ஏமாந்துதான் போவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கையை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் நாளைக்கே உங்களைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் ஜாக்கிரதை! இதைக் கூறுவதால் நான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல. எனது கோபமனைத்தும் தமிழ்நாட்டு அரசியல் ஜாம்பவான்களின் மீதுதான்.தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசி பிழைப்பு நடத்தி லாபம் சம்பாதிக்கும் அவர்கள் சொந்த மண்ணிற்காக ஒன்றுமே செய்தது இல்லை. எங்கும் எப்போதும் லஞ்சம் லஞ்சம் லஞ்சம். யாருக்கும் தகுதிக் கேற்ற வேலை கிடைப்பதில்லை. அதில் ஊழல் இதில் ஊழல், வெட்டு குத்து கொலை, வன்முறை. முதலில் அனைவரும் இந்தியர்கள் பின்புதான் தமிழர்கள் என்ற எண்ணமே இல்லை. அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்குக் காட்டும் பொய்யான அக்கறையை கொஞ்சம் தமிழகத்தின் மீது காட்டியிருந்தால் நல்லாயிருக்கும்.
சரி இவர்கள் சொல்வது போல இரட்டைக் குடியுரிமை வழங்கிவிட்டோம் பின்பு இலங்கை அரசு இந்தியக் குடியுரிமை பெற்றவர்களின் இலங்கைக் குடியுரிமையை ரத்து செய்கிறோம் என்று சொன்னால் அகதிகளின் நிலை என்ன ? என்னதான் இருந்தாலும் தமது சொந்த மண்ணில் இருப்பதுபோல் வருமா?
டிஸ்கி : இன்றைய சூழலில் இதைப் பற்றி துணிந்து எழுதிவிட்டேன். தவறுகள் இருப்பின் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும். இது என் கருத்து மட்டுமே. என் நிலை தெளிவு பெற்றபின் கருத்துகள் மாறலாம்.
செவ்வாய், 6 அக்டோபர், 2009
மனித சஞ்சாரம் - 2
இன்று நகரத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் அமைதி என்பதே இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் என்னை கொடுத்து வைத்த கழுதை என்றே சொல்லவேண்டும். நான் பிறந்ததிலிருந்தே கோபிச்செட்டிபாளையம் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறேன். நடுவில் சில காலம் ஊட்டி கோயம்புத்தூர் சென்னை என்று ஜாகை மாறினாலும் பிடித்தது என்னவோ கிராமம்தான்.
சிறிய வயதில் காடு கரை தோட்டம் தொறவு என நான் சுற்றாத இடமே இல்லை. அப்போதே எனக்கு மனித சஞ்சாரம் இல்லாத இடங்களை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நானும் இன்னும் இரண்டு நண்பர்களும் ஒரு ஞாயிற்றுக் கிழமை வெளியே செல்ல முடிவெடுத்தோம். ஊருக்கு வெளியே கீழ் பவானி வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. அதனையும் தாண்டி சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் செல்ல நினைத்த இடத்தின் பெயர் "அல மேடு". ஏன் அல மேடு என பெயர் வந்தது என அப்போது தெரியவில்லை. அந்த இடத்தைப் பார்த்தீர்களானால் ஒரு சிறிய மலை போலான மேட்டுப் பகுதி அது ஒரு எழெட்டு குன்றுகளாய் அலை போல நீண்டிருக்கும். ஒரு வேளை "அலை மேடு" என்பதுதான் மருவி அலமேடு ஆனதோ என்னவோ தெரியவில்லை..
எங்கள் ஊரிலிருந்து இரண்டு மூன்று ஊர்களைத் தாண்டி பல தோட்டங்களைத் தாண்டி செல்ல வேண்டும். அந்த இடத்திற்குச் செல்ல இன்றும் பஸ் வசதி கிடையாது. முக்கியச் சாலையிலிருந்து ஏழெட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நாங்கள் நடந்தே செல்வோம் பேசிக்கொண்டே ஏதாவது சருகம் பழம், கள்ளிப் பழம், மாங்காய் என அங்கங்கு கிடைக்கும் பழங்களையெல்லாம் தின்று கொண்டே செல்வோம். அங்கு ஒரு இயற்கையாய் அமைந்த என்றைக்கும் வற்றாத சுனை உள்ளது. அதன் அருகிலேயே வன பத்ர காளியம்மன் எழுந்தருளி அருள் பாலித்து வனத்தை காத்து வருகிறாள். சற்று முன்னேறினால் மிகப் பெரிய பாறைகள் கொண்ட அக்குன்று நம் கவனத்தை ஈர்க்கும். அங்கு விஷத் தேள்களின் அபாயம் அதிகம் என்று சொன்னார்கள் என்று ஒரு பெரிய கல்லை உருட்டினேன். உண்மையிலேயே அபாயம்தான் கல்லுக்குள் இருந்து பல அளவுகளில் தேள்கள் குதிததோடின.
இரண்டு மூன்று வீடுகளே அந்த மேட்டின் அடிவாரத்தில் இருந்தது. அங்கு சென்றோம் அவர்கள் பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் கனிவுடன் உபசரித்து தெளுவு என்று சொல்லப்படும் பதநீர் அளித்தார்கள் வெயிலுக்கு இதமாய் இருந்தது. அவர்கள் இன்னொரு அபாயத்தையும் கூறினார்கள் மாலை, இரவு நேரங்களில் வங்கு நரிகள் வருமாம், ( வங்கு என்பது குகை ( கேவ் ) வடிவிலான சிறிய குழி ) அவற்றை சமாளிக்கவே வேட்டை நாய்களை வளர்த்து வருவதாக கூறினார்கள். சற்று மிரட்சியுடன் நன்றி சொல்லி வெளியேறினோம்.
இங்கு வன பத்ர காளியம்மன் கோவில் பற்றி முதலில் சொன்னேன் அல்லவா?. அங்கு ஆண்டிற்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படும். அப்போது பெருவாரியான உள்ளூர் மக்கள் அங்கு சென்று வழிபட்டு வருவார்கள். அங்கு நடைபெறும் அன்னதானம் மக்களை பெரிதும் கவர்ந்தது ஆகும். கிடாய் வெட்டி கறிக் குழம்புடன் சாப்பாடு காலையிலிருந்து மாலை வரை அனைவருக்கும் உண்டு. அதுவும் சற்று வித்தியாசமாய், அதாவது சாப்பிடுவதற்கு தரையில் குழி பறித்து அதில் சேம்பை இலை எனப்படும் ஒரு வகை இலையை வைத்து அதில்தான் சாப்பாடு பரிமாறுவார்கள்.
இப்போதும் இங்கு திருவிழா தவிர்த்து மனித சஞ்சாரம் அற்ற நாட்களில் செல்ல ஆசை உண்டு . அதற்க்கு நேரம் இல்லை அப்படியே இருந்தாலும் துணைக்கு வர யாரும் முன்வருவதில்லை அப்படியே வந்தாலும் சின்ன வயதில் சென்றால் தப்பாய் எடுத்துக்கொள்ளாத இச்சமூகம் இப்போது அந்த மாதிரியான ஆள்அரவமற்ற இடத்திற்கு சென்றால் ஏதோ தவறான செயலைச் செய்யப் போவது போல சந்தேகக்கனைகளைத் தொடுக்கும். ஆசைகள் இருந்தாலும் மனதில் வைத்துக் கொண்டு இருக்கவேண்டியதுதான்.
திங்கள், 5 அக்டோபர், 2009
இதுவும் நடந்தது.
சனி, 3 அக்டோபர், 2009
தண்டோரா
டிஸ்கி : விசித்திர = வித்யாசமான
மித்திரன் = நண்பன்
வியாழன், 1 அக்டோபர், 2009
இதுவும் நடந்துகொண்டிருக்கிறது
அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே! கழக ஆட்சியிலே ஏழைகளின் பசிப் பிணியைப் போக்க முதல்வர் அளித்த அருமையான திட்டம் ஒரு ருபாய் அரிசித் திட்டம். ஆம், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மத்தியிலே கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மத்திய அரசுக்கு கடிதம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! காவிரியில் தண்ணீர் பெற்றே தீருவோம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! எடியூரப்பா எனது நண்பர் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! பெங்களூரில் திருவள்ளுவர் சிலை சென்னையில் சர்வஞர் சிலை ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! காவிரிப் பிரச்சனை தீர்ந்தது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மானங்கெட்ட தமிழர்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஹொகனக்கல் கோவிந்தா ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! அம்மையார் ஆட்சியிலே நடக்கலையா? ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! தேர்தலா ? அத ஸ்பெக்ட்ரம் பாத்துக்கும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! குடும்ப சமாதானம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! எல்லாருக்கும் ஹல்வா ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மறவாதீர்கள் மறந்தும் இரவாதீர்கள்! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஆகவே, உதய சூரியன் சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! வாங்க சார் வாங்க சார் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! அண்ணனுக்கு வழி விடுங்க ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா!........................
டிஸ்கி : யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இடைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! என்ற வார்த்தையை துணை முதல்வர் அவர்கள் சற்று அதிகமாகவே உபயோகித்தார். அதையும் சந்தையில் லேகியம் விற்பவர் பேசுவதும் ஒன்று போலவே எனக்குப் பட்டது. அதை இங்கே சொல்லி இருக்கிறேன் அவ்வளவே! இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே! கழகக் கண்மணிகள் கண்ணில் பட்டால் ( படாது, இந்த அளவிற்க்கு மண்டையில ஏது நமக்கு ? ) மன்னிக்கவும்.
இதுவும் நடக்கலாம்
ஜானகி : என்னடி உன் பொண்ணுக்கு பெரிய இடத்துல கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கீங்கலாமே! மாப்ள வீட்ல வசதி எப்படி? எவ்ளோ நகை போடுறீங்க?
மைதிலி : ஆமான்டி ரொம்ப பெரிய இடம் மாசம் கால் கிலோ துவரம் பருப்பு சமையலுக்கு ஆகுதுன்னா பாத்துக்கோயேன்! நாங்க இருபது கிராம் வெள்ளி போடப்போறோம்.
வியாழன், 17 செப்டம்பர், 2009
மனித சஞ்சாரம்
எழுதப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். நகர்ப் புறங்களில் மனிதர்கள்
அதிகமாகக் கூடும் இடங்களான பஸ் ஸ்டேசன்,ரயில்வே ஸ்டேசன்,ஜெனரல் ஹாஸ்பிட்டல்,கோவில்கள் போன்ற இடங்களில் மனித சஞ்சாரம் அதிகமாக
இருக்கும். எங்கு நோக்கினும் லொட லொட பேச்சு சப்தம்,பான்பராக், ஹான்ஸ் போன்றவற்றின் உபயத்தால் மூலை முடுக்கெல்லாம் காவி வர்ணம் பூசப்பட்டிருக்கும். அதிலும் ஹாஸ்பிட்டல்,கோவில்களில் அமைதி மட்டுமே குடிகொண்டிருக்க
வேண்டும் என்பது விதி. ஆனால் நடை முறையில் அப்படியா உள்ளது. இதன் காரணமாகவே கோவிலுக்குச் செல்வதையே வெறுத்து பிரணவப் பொருளான
அந்த ஓம்கார ரூபனை மனதினுள்ளேயே வேண்டிக்கொண்டிருக்கின்றேன்.
பொது இடங்களில் நமது நாட்டைப் பொறுத்தவரை நம் மக்களில்
( மக்கள் என்று சொல்வதைவிட மாக்கள் என்று சொல்வதே சாலச் சிறந்தது என நினைக்கிறேன். என்னையும் சேர்த்துத்தான் ) அநேகம் பேர்
விதிமுறைகளுக்கு மாறாக ஒரு ஒழுங்கோ தூய்மையோ சிறிதும் இல்லாமல்
நடந்து கொள்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.சரி மனித சஞ்சாரமே
இல்லாத இடங்களே இல்லையா? என நீங்கள் கேட்கலாம்.
( ஆமா! ஆமா! அதுக்குத்தான வந்துருக்கோம்! ) உங்களுக்காகத்தான் இந்தப்பதிவு.
நான் சென்று ரசித்த அமைதியின் சிகரமான ஆளரவமற்ற இடங்களைப்
பற்றித் தான் இதில் சொல்லப்போகிறேன்.
நான் உதகையில் கல்லூரியில் படிக்கும் போது வெளியே தனியாக அறை எடுத்து தங்கி இருந்தோம். தொட்ட பெட்டா போகும் வழியில் மேல் கோடப்பமந்து என்ற ஒரு இடம் அங்குதான் அறை இருந்தது.நண்பர்கள் அனைவரும் ஒருநாள் வெளியே சென்று சுற்றிப் பார்க்க தீர்மானித்தோம். உதகையில்
சுற்றுலாவாசிகள் பொதுவாக பார்க்கும் இடங்களையெல்லாம் பார்த்தாகிவிட்டது.
இனி புதிதாக யாரும் அவ்வளவாக பார்க்காத இடங்களைப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்தோம்.
அதன்படி அதே தொட்ட பெட்டா,கொத்த்தகிரி ரோட்டிற்கு
மேல் வந்தோம். அங்கு அச்சாலையின் முதல் கொண்டை ஊசி வளைவிற்கு
வலப்புறமாக ஒரு பாதை சென்றது. அதில் செல்ல நினைத்து அப்பாதையில் செல்ல ஆரம்பித்தோம்.வானம் தன் மேனியில் கருமை வண்ணத்தைப் பூசிக்கொண்டது.
பனித் தூவல்கள் ஆவியாய் எங்களை உரசிச் சென்றது. மழை, புதிதான இடத்தைப்
பார்த்த மழலை போல,வரலாமா வேண்டாமா என தூரலாகி,பெரிதாக வருவதற்கு எத்தனித்துக் கொண்டிருந்தது. அப்பாதை சின்கிலாரீஸ் ஹோட்டல் வரை
சென்று முடிந்தது. அதன் பின் அருகிலேயே ஒரு ஒற்றையடிப் பாதை நீண்டது.
நாங்களும் அப்பாதையிலேயே சென்றோம். வழி நெடுகிலும் காட்டு ரோஜாச் செடிகள்
பூத்துக்குலுங்கின. ரோஜா வாசம் மூக்கைத் துளைத்தது. முதலில் நானும் இன்னொரு நண்பனும் சென்றோம், எங்கள் பின் இன்னும் இரு நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். சுமார் ஒரு கி மீ சென்றிருப்போம், நேராகச் சென்ற பாதை திடீரென இடது புறம் திரும்பியது. நாங்களும் இடது புறம் திரும்பிய போது அங்கு தெரிந்த
காட்சியைக்கண்டு நாங்களிருவரும் அப்படியே அசையாமல் நின்றுவிட்டோம். அங்கு ஒரு குளம் போன்றதொரு நீர்த்தேக்கம் எங்கள் கண்ணில் பட்டது. ஆம், மேலே படர்ந்த பனித்தூவல்கள் நீரில் பட்டு எதிரொலித்து நீரெங்கும் பால் போல வெண்மை அடர்ந்து காணப்பட்டது. நாங்கள் நால்வரும் சற்று முன்னேறினோம். இயற்கைத் தாயின் பேரெழில் எங்கள் மனதில் நிலைத்து நின்றுவிட்டது. நீர்த்தேக்கத்தின் மத்தியில் ஒரு பாழடைந்த நீர் உந்து நிலையம் இருந்தது. எப்பவோ அங்கிருந்து உதகை நகருக்கு தண்ணீர் கொண்டு சென்றிருக்க வேண்டும். அதற்குச் செல்ல கரையிலிருந்து அதற்குச் செல்ல சிறிய ஒரு அடி அகலம் கொண்ட பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
நங்கள் அதில் செல்ல ஆயத்தமானோம். மெதுவாக ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து சென்றோம். யாருமே அவ்வளவாக புழங்காத இடமென்பதால் இரும்பால் ஆன பாலம் துருப்பிடித்து கீழே விழுந்துவிட்டோமானால் என்ன செய்வது என்ற பயம் மனதில் இருந்துகொண்டே இருந்தது. எப்படியோ ஒரு வழியாக பாலத்தைக் கடந்து நீருந்து நிலையத்திற்கு வந்துவிட்டோம். அங்கே வட்ட வடிவிலான ஒரு கூண்டுபோல உள்ளே காணப்பட்டது. வட்டத்தின் ஓரத்தில்தான் நிற்க முடியும். நடுவிலே பெரிய துவாரம் இருந்தது. மிகுந்த பயத்துடன் அங்கிருந்து கரைக்கு வந்தோம். இந்த இடமே ஆள் அரவமற்றுக் காணப்படுவதால் இங்கிருப்பது சரியல்ல என்றெண்ணி அனைவரும் அங்கிருந்து கிளம்பினோம்.
நாங்கள் சென்ற இப்பயணம் என் மனதில் நீங்காது இடம் பெற்றுவிட்டது. நான் மறுபடியும் தனியாக பலமுறை அங்கு சென்றிருக்கிறேன். அதே நீருந்து நிலையத்தில் பல மணி நேரம் இருந்திருக்கிறேன். நான் அங்கு சென்றமட்டிலும் அவ்விடத்திற்கு யாரும் வருவது இல்லை. ஒரே ஒரு முகமதியரின் சமாதி மட்டும் அங்கே உள்ளது. அங்கு சென்ற போதெல்லாம் மனம் லேசானது போல உணர்வு என்னுள் எழும். இயற்கைத் தாயின் முழுமையான அரவணைப்பில் உள்ளது போல உணர்வு அலைகள் பொங்கி எழும். கவிதை ஊற்று பெருக்கெடுக்கும். ஆஹா! என்ன ஒரு ஆனந்த அனுபவம். அதைச் சொல்ல தமிழில் வார்த்தைகளே இல்லை எனலாம். அந்த இடம் இப்போது எப்படி உள்ளது என்று தெரியவில்லை.
யாருக்காவதுதெரிந்தால்சொல்லுங்களேன்!
புதன், 16 செப்டம்பர், 2009
தனித்துவம்
உலகில் ஜனிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒரு தனித்துவம் என்பது உண்டு.ஆனால் அது மற்றவர்களிடமிருந்து அதிகமாக
மாறுபட்டிருக்குமானால் அவை பிறரை கவரலாம். அதுவே சிறப்பானதாகவும்
உயர்ந்ததாகவும் இருக்குமானால் அம்மனிதனை அத்தனித்துவம் புகழின் உச்சிக்கு
கொண்டுசென்றுவிடுகிறது. இப்போது மட்டுமல்ல எக்காலத்திலும் புகழ் பெற்ற
பிரபலங்களின் நிலை இதுதான். தன்னுடைய தனித்துவத்தை பிறர் அறியச் செய்யும் போதுதான் ஒரு மனிதன் பிரபலமாகிறான்,புகழடைகிறான்.அது கீழ்நிலையானாலும் சரி,
மேல்நிலையானாலும் சரி அதற்கும் உயர்நிலையானாலும் சரி.
இப்பொது ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிப்போம்.நமது நாட்டில் தனித்துவம் உடைய பெரும்பாலான மனிதர்களின் ஆரம்பகட்ட அல்லது சிறு பிராயத்தில் உள்ள அவர்களின் சிறந்த, உயர்வான, தனிப்பட்ட திறமைகள் அதற்குரிய அந்தஸ்தைப் பெறுகின்றதா? என்றால் அநேகம் பேருக்கு பதில் இல்லை என்றே வரும். அது பள்ளியாகட்டும்,வீட்டில் ஆகட்டும்,சமுதயத்திலாகட்டும் எங்குமே பலரது தனித்துவங்கள் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ சிலருக்கு கவனிக்கப்பட்டிருக்கலாம்.ஆனால் பலரது நிலைமை கவனிப்பின்மையே!
மேலை நாடுகளில் அதாவது மேற்கத்திய கலச்சாரம் பரவிய நாடுகளில் இந்த அவல நிலை உள்ளதா? என்றால் அதற்கும் விஷயமறிந்தவர்களிடம்
இல்லை என்றே பதில் வரும்.ஏன் இந்தப் பாகுபாடு ?
நான் ஆங்கிலப்படங்கள் மற்றும் சர்வதேச மொழித் திரைப்படங்களை அதிகமாகப் பார்ப்பவன். அதில் காணும் குழந்தை வளர்ப்பு
முறை மற்றும் கல்விமுறை இவற்றை பார்த்தது தான் நான் இந்த பதிவை எழுத தூண்டியது. நீ எப்படி ஒரு கற்பனையினால் ஆன ஒன்றுக்கும் உதவாத ஆங்கில
சினிமாவை வைத்து இதைக் கூறலாம்? என்று கேட்க நினைத்தால் உங்கள் எண்ணம் தவறு. நீங்கள் நினைப்பது போல, நாம் தற்போது பார்த்து ஜீரணிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பெரும்பாலான கேடுகெட்ட,தரங்கெட்ட தமிழ் சினிமாவைப்
போல இல்லை அத்திரைப்படங்கள், அனைத்தும் உயர்ரகம். அவை அந்தந்த நாடுகளின் கலாச்சாரக் கண்ணாடிகள்.( எனென்ன திரைப்படங்கள் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்று பின்னர் பதிவிடுகிறேன்.)
சரி விஷயத்திற்கு வருவோம்,தனித்துவத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொடுக்கிறார்கள். அங்கே குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, நம்மவர்களைப் போல், அதிகப்பிரசங்கி என்று அதட்டுவதில்லை,தெரியாது என ஒதுங்கிவிடுவதும் இல்லை, அந்த சாமிதான் அப்படி பண்ணுச்சு என்று கதை கட்டுவதும் இல்லை. தெரியாததை தெரிந்து கொண்டு அக்குழந்தைகளின் வயதுக்கு ஏற்றது போல புரிய வைக்கிறார்கள்.அதேபோல்
சமுதாயத்தில் எது நல்லது எது கேட்டது என்று அவர்கள் போக்கிலேயே விட்டு அதை அனுபவித்து புரிய வைக்கிறார்கள்.
எடுத்துக்கட்டாக, நல்ல நாகரீகமான குடும்பத்தில் பிறந்த அமெரிக்கச்
சிறுவன் தொலைக்காட்சியிலோ அல்லது வேறெங்கோ பார்த்து தெருவோரம் வசிக்கும் மனிதர்களின் மேல் பற்று வருகிறது. தெருவோரங்களில் வேலை வெட்டி இல்லாமல்
சோம்பி இருக்கும் அம்மனிதர்களைப் போல வாழ விரும்புகிறான் அது அவனை அந்த அளவிற்கு ஈர்த்துவிடுகிறது.இதே நிலையில் நம் நாட்டில் சிறுவன் எப்படி இருப்பான்? தனியறை வாசம், அப்பாவின் பிரம்படி, சமுதாயத்தில் பழிச்சொல், பள்ளியில் புறக்கணிப்பு என்று பல விதமான அணுகுமுறைகள். ஆனால் அங்கு அப்படி அல்ல. அந்த அமெரிக்க தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெருவிற்கு வந்து ஒரு நாள் வசித்து,
அதிலுள்ள இன்னல்களைப் புரிய வைக்கிறார்கள். சிறுவன் திருந்திவிடுகிறான்.
இப்படி ஓர் சம்பவம் நடந்தது.எனக்கு விஞ்ஞானம் சார்ந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு
உண்டு. பல யோகிகள் முனிவர்கள் தெய்வங்கள் இப்படி பலதும் நமக்கு ஆன்மீகத்தில்
வழிகாட்டுகின்றன. அதில் எந்த வழி சிறந்தது என நான் பழகிவரும் நண்பர்களிடத்தே
கேட்டேன். அவர்கள் அனைவரும் படித்தவர்கள் ,தன்னடக்கம் மிகுந்தவர்கள்,
ஆன்மீகத்திலும் ஈடுபாடு உடையவர்கள்,ஆன்மீகத்தில் பெரியவர்கள் பலரிடத்தும் தொடர்பு உண்டு. ஆனால் அவர்களிடமிருந்து வந்த பதில் நான் அந்த அளவிற்கு பெரிய ஆள் இல்லை. ஆக அவர்கள் மிகப்பெரிய விஷயங்களைப்பற்றி விவாதிக்க தயங்குகிறார்கள். தன்னடக்கம் என்றாலும் ஓரளவிற்குதான் வேண்டும் அல்லவா? இதே மேலை நாட்டில் தெரிந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க அவர்கள் தயங்குவதில்லைமேலும் அண்ட சராசரங்களையும் இளம் வயதிலேயே அலசி ஆராய்கிறார்கள் என்பதுதான் உண்மை.
நான் எதோ திரைப்படங்களைப் பார்த்து கூறவில்லை
உண்மையிலேயே அவர்கள் அப்படித்தான் இதை பல பயணக்கட்டுரை நூல்களின் வாயிலாக தெரிந்துகொண்டேன்.குழந்தைகளாக இருப்பினும் அவர்கள் தனித்துவத்திற்கு மதிப்பளிக்கின்ற அத்தன்மையை நம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல குழைந்தைகள் தவிர மற்றவர்களின் தனித்துவம்
மிளிர, மேலை நாடுகளில் ஒரு சிற்றூர் ஆனாலும் சரி அங்கே தினசரி உள்ளூர்
செய்தித்தாள் வருகிறது.அதில் அவ்வூர் செய்திகளோடு மக்களின் படைப்புகளும் பிரசுரமாகிறது. அதோடு விளையாட்டு மன்றங்கள், தொலைக்காட்சிகள் போன்றவையும் நடத்தப்படுகின்றன. இதனால் வளரும் நிலையிலுள்ள திறமையாளர்கள் தங்களது
திறமையை மெருகேற்றிக்கொள்ள வாய்ப்பாகிறது. எங்கு சென்றாலும் கூச்சம்
பயம் இன்றி தனித்துவம் பெற ஏதுவாகிறது.அந்த நாடுகளில் உள்ள அரசும் இதற்க்கு
உதவி செய்கிறது நம்மளைப்போல் இலவச தொ கா பெட்டி, இலவச நிலம், இலவச செருப்பு, இலவச பருப்பு, இலவச அது, இலவச இது என மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கவில்லை.
ஒரு விளக்கு எரிந்து கொண்டே இருக்க
தூண்டல் அவசியம். அந்த செயலை அங்கு அனைவரும் செய்கிறார்கள். குறிப்பாக
பள்ளிகளில் பாடம் மட்டும் சொல்லித்தருவதில்லை அதைவிட அதிகமாக வாழ்க்கையை
வாழ சொல்லித்தருகிறார்கள். உதாரணமாக ஆலிவர் இன் லில்லிபுட் கதையை
நாம் படித்து பில் இன் த பிளாங்க்ஸ், சூஸ் த பெஸ்ட் என்று பட்டையை கிளப்பி இருப்போம். அனால் அங்கு அப்படி இல்லை. அதே கதையை மனனம் செய்து
மற்றவர்கள் முன் கதையை முக பாவத்துடன் சொல்லிக்காட்ட வேண்டும். நன்றாக கேளுங்கள் சொல்லிக்காட்ட வேண்டும் ஒப்பிதுக்காட்ட அல்ல. இப்பொது நீங்களே சொல்லுங்கள் எதில் தனித்துவம் வளரும்?
தனித்துவம் வெளிப்படையாகத் தெரிந்தால்தான் சிறு பிராயத்திலிருந்தே வாழ்க்கைப் பாதையில் சரியான வழியில் செல்ல ஆயத்தமாக முடியும். பிற்காலத்தில் அதில் வேரூன்றி புகழ்
பெற வழி கிடைக்கும். பிள்ளைகள் தங்களது தனித்துவத்தை எதில் நிலை பெறச் செய்கிறார்களோ அவர்கள் அதுவாகவே ஆகிறார்கள். இந்த சமுதாயத்தையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொண்டு தனித்துவம் பெற ஏட்டுக் கல்வி மட்டும் போதாது, அனுபவக்கல்வியே தனித்துவம் மிளர வகைசெய்யும்.( நம் அனைவருக்கும் தெரியும் இந்த நிலை நம் நாட்டில் மாறாது என்று, அப்புறம் உனக்கென்ன வேர்த்து வடிகிறது
என்கிறீர்களா? ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன் )
ஆகவே, பெற்றோர்களே! மற்றொர்களே! ஆசிரியர்களே! முதலில் உங்கள் குழந்தைகளை தனித்துவம் மிகுந்த நல்ல மனிதனாக்குங்கள் பின்பு அறிஞர்களாக தானாகவே மாறிக்கொள்வார்கள்.
டிஸ்கி : இந்த அளவிற்கு கட்டுரை எழுத நான் அவ்வளவு அனுபவசாலி அல்ல இருந்தாலும், பல பயணக் கட்டுரைகளை படித்ததின் மூலம் நமது நாட்டினருக்கும் வெளி நாட்டினருக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ள முடிகிறது. பெற்றோர்களுக்கு அறிவுரை கூறுமளவிற்கு எனக்கு வயதும் இல்லை. என் மனக்குறைகளை கொட்டியிருக்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
சனி, 22 ஆகஸ்ட், 2009
அமானுஷ்யம்
மானுட வாழ்வில் அமானுஷ்யம் என்பது எக்காலத்திலும் உள்ளவை. அவை நாம் கண்டறிந்த தொழில்நுட்ப வசதிகளால் பதிவு செய்ய முற்படும் போது அதில் மறைந்திருக்கும் உண்மைகளை நம்மால் சரிவர உணர முடிவதில்லை.அதில் ஒன்றுதான் கீழே நீங்கள் பார்க்கும் படக்காட்சி.நினைத்தாலே முக்தி அருளும் திருவண்ணாமலை காட்டில் சித்தர் ஒருவர் பறப்பதை படமாக்கி உள்ளனர். பாருங்கள்....( படத்திற்கான சுட்டி இங்கே உள்ளது யு டியூப் ஐ டி உள்ளவர்கள் மட்டும் பார்க்க இயலும் )
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009
ஒ இதுதான் காதலா ?

அன்பு நண்பர்களே!
மற்றுமொறு நான் எழுதிய கவிதையிலிருந்து ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.அந்த ஒன்றுதான் காதல்.இந்த உலகத்தில் காதல் வயப்படாதவர்களே இல்லை எனலாம் அல்லவா? நானும் அந்த வலையில் விழுந்தவன் என்று இங்கு கூறினால் அது முழுக்க முழுக்க பொய் என்று ஆணித்தரமாக கூறலாம்.அனால் அந்த நிலையை கடந்து வந்தேன் என்றால் அது ஓரளவிற்கு உண்மை எனலாம்.அச்சூழ்நிலையில் நான் எழுதிய கவிதைதான் இது.பாருங்கள் ஒரு காதல் கடிதத்தை உயிரெழுத்தில் வடித்திருக்கிறேன்.
அருந்தமிழ்க் காவியமே !
ஆனந்த நாட்டியமே !
இயம்புகின்றேன் இன்று எனது காதலை
ஈந்து விடு நாளை நல்ல முடிவை
உன் மனதில் நான் என்று நீ நினைத்தால்
ஊருக்குத் தெரியாமல் உரைத்துவிடு கடிதத்தில்
என் மனதில் நீ இல்லை என்று நீ கூறினால்
ஏன் என்று கேட்க நான்
ஐநா சபையும் அல்ல அரசியல்வாதியும் அல்ல
ஒருக்கால் நீ இதை ஏற்காவிட்டால்
ஓடிவிடு உன் படிப்பு வீணாகும்
ஔடதம் போலத்தான் வாழ்க்கையும்
அகுதை நினைத்தே இனி என் பயணமும்...........
காதல் செய் !
காதல் மட்டும் செய்யாதே !
இந்த பொன்மொழியுடன் நான் எழுதிய ஒரே ஒரு காதல் கவிதையை எனக்கு என்னவென்றே தெரியாத நான் இன்றுவரை புரிந்து கொள்ள முடியாத காதலுக்கு உங்கள் முன் பணிவன்புடன் சமர்பிக்கிறேன்.
இல்லாத காதலுடன்...........
- அ சதிஷ் குமார்
புதன், 19 ஆகஸ்ட், 2009
நினைவுகள் ( இது கவிதை மாதிரி ஆனா....... )

அன்பு நண்பர்களே !
நினைவுகள் என்றும் அழியாதவை அவை என்றும் பேசுவதில்லை .இரவின் மடியில் நாம் விழித்திருக்கும் போது தென்றலாய் வந்து நம்மைத் தாலாட்டும் .அந்தி மாலைப் பொழுதுகளில் நம் வீட்டு ஜன்னல்களை வெறித்திருக்கும் போது சூன்யமாய் வந்து நமக்குச் சுகம் தரும் .நம் உயிரும் உள்மனதும் உள்ளவரை நினைவுகள் என்றும் அழிவதில்லை . அவை என்றும் பேசுவதும் இல்லை . சில நேரங்களில் அவை எழுத்துக்களில் மிளிரவும் செய்யும் இதோ இந்தக் கவிதையைப் போல..............
அது ஒரு கனாக்காலம்
ஒற்றைக்கால் சட்டை யோடு உலகம் சுற்றி
காடுகளின் காதலனாக
கண்மாய்களின் காவலனாக
களிப்புடன் காலத்தைக் கழித்த காலம் அது !
பள்ளியில் வாத்தியாரின் பிரம்படி வைபவம்
வீட்டில் அப்பாவின் அதிரடி தாண்டவம்
அனைத்தையும் மறந்து வீட்டின் முற்றத்தில் படுத்து
நட்சத்திரங்களை எண்ணி நாள் கழித்த காலம் அது !
வீட்டிலே முக்கனிகள் நிறைந்திருக்க
மாற்றான் தோட்டத்தில் மாங்கனி திருடி
உற்றவன் அறியாமல் மற்றவர்களோடு பகிர்ந்து
மந்தகாசமாய் உண்டு களித்த காலம் அது !
கரியை அரைத்து கரும்பலகையிலிட்டு
வாய்ப்படுகளின் வகை பயின்று வண்ணமயமாய்
வகுப்பில் மிளிர்ந்து - சிந்தனையைச்
சிலேட்டில் கொட்டித் தீர்த்த காலம் அது !
இவற்றை எண்ணி எண்ணி நான் பார்த்திருக்க
எட்டும் எட்டும் பத்தென்று தப்பாய்க்கூட்டி
உயர் அதிகாரியை பயர் அதிகாரியாக வைத்து
என்றும் நான் நினைக்கும் இனிய கனாக்காலம் அது !
ஆம் , அது ஒரு கனாக்காலம் !
நெஞ்சில் தைத்த நினைவு முட்களுடன் ..................
அ சதிஷ் குமார்.
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
குறிப்பு
கீழே நீங்கள் படித்த கவிதை ( அட முறைக்காதீங்கப்பா ). சிலருக்கு ஒரு நெகடிவ் விஷயமாக தோன்றலாம். ஆனால் இன்றைய நமது பாரதம் உள்ள சூழ்நிலையில் இச்சிந்தனை சாத்தியமே. என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று இப்பொது பாடத் தோன்றுகிறதல்லவா!
முன்பு வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக இருந்தோம் இப்போது அதில் மாற்றமில்லை
இப்போதும்
வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாகத்தானிருக்கிறோம்! ( நான் வெள்ளை உடை உடுத்தும் சில தரங்கெட்ட அரசியல்வாதிகளை சொல்லலயிங்கோவ், அப்பறம் பின்னாடி யார் பஞ்சராகறது )
இது கவிதை அல்ல ஒரு எளியவனின் ஏக்கம்
«ýÀ¢ý «Õ¨Á ¦¾¡¢Â¡Áø ÁÉ¢¾ ¯ÈÅ¢ý Á¸òÐÅõ Ò¡¢Â¡Áø
Áì¸¨Ç àñÊÅ¢ðÎ §ÅÊ쨸 À¡÷ìÌõ «Ãº¢Âø ºì¾¢¸û!,
«ÏÅ¢ý ºì¾¢¨Â ¾ÅÈ¡ö Ò¡¢óÐ ¾ôÀ¡ð¼õ
¬Îõ º¢Ä ¾È¢¦¸ð¼ ¿¡Î¸û !,
இறையாண்மையை காற்றில் பறக்கவிட்டு
அதிகாரத்தை ஆவர்த்தனம் செய்யும் அதிசயங்கள் !
±Ç¢ÂÅ÷¸Ç¢ý Àº¢ôÀ¢É¢¨Â º¡¾¸Á츢 Á¾ò¾¢ý ¦ÀÂáø
ÁÉ¢¾ò¨¾ þÆ¢×ÀÎòÐõ º¢Ä Áð¸¢ô§À¡É ¦Åð¸î¦ºÂø¸û !
போகும் திசையே தெரியாமல்
எங்கே போகிறது என் பாரதம் !
எளியவன் எளியவனாகவே வாழ்கிறான் !
வலியவன் வலியவனகவே இருக்கிறான்!
இடையில் இருப்பவர்கள் இல்லாமல் போகிறார்கள்!
இருப்பவர்கள் ஏமாற்றுகிறார்கள் !
எஞ்சிய மக்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள் !
எங்கே போகிறது என் பாரதம் !
திரும்பிய திசைகள் எல்லாம் வன்முறைகள் ,வெறிச்செயல்கள்
வந்தேறிகளை வாழவைத்த இத்திருநாட்டில்
தீவிரவாதம் தானாய்த் தலை விரித்து ஆடுகிறது!
தினம் ஒன்றாய் அரங்கேரும் அரசியல் நாடகங்கள்,
பிணத்தினுள்ளும் பணம் தேடும் சில அரசியல் ஓநாய்கள்,
அப்பப்பா !
போதும்! போதும்!
எண்ணைக்கும் தண்ணிக்கும் திண்டாடும்
இப்பூவுலகினைக் காண என்னால் முடியாது!
நிச்சயமாய் முடியாது!
ஆதலால்,
உயிர்கள் இருந்த சுவடு கூட தெரியாமல்
புல்பூண்டைக்கூட மிச்சம் வைக்காமல்
அத்துணையும் அழித்துவிடு
கணப்பொழுதில்!
அதன்பின்,
புத்தம் புது பூமி புதிதாய் பிறக்கட்டும்
மாசில்லா மானுட சமுதாயம் மலரட்டும்.
என் இதயத்தின் அழுகுரல்!
திங்கள், 17 ஆகஸ்ட், 2009
பலரின் வேண்டுகோள்களுக்கிணங்க (ஒரு விளம்பரம்......) என் பிளாக்கில் கவிதை எழுதுவது என்று முடிவு செய்துவிட்டேன்.( ஹும் உங்க தலையெழுத்த மாத்த யாரால முடியும்) இதோ!எனது முத்தான முதல் கவிதை(படிச்சுதெளிவாகிடுங்க)
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009
நூல் பல கல்.
புத்தகங்கள் நமது ஒப்பற்ற ஆசானாக செயல்படுகின்றன.நல்ல நூல்களே நல்ல நண்பர்கள்.நூல்கள் பல படித்திருந்தாலும் குறிப்பிட்ட சில நூல்கள் மட்டும் நம் நெஞ்சில் நீங்காது இடம் பெற்றுவிடுகின்றன.அந்த வகையில் நான் விரும்பிப்படித்த சில நூல்கலை கீழே கொடுத்துள்ளேன்.
( டாப் டென் வரிசையில் )
புத்தகங்கள்
1.எனது போராட்டம்
( அடல்ப் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு.ஒரு தவறே செய்தாலும் அதை இறுதிவரை கடைபிடித்து வாழ்ந்த மனிதன்.கொடூர செயல்கள் செய்தாலும் செய்வதற்கு ஓர் அசத்திய துணிச்சல்வேண்டுமல்லவா? )
2.அக்கினிச் சிறகுகள்
( அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு.எளிமையின் எடுத்துக்காட்டு. ஒரு ஜனாதிபதி ஆனபோதும் கூட, இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என வாழ்ந்து காட்டிவரும் மனிதருள் சிறந்த மனிதர். இதைச்சொல்ல நமக்கு அருகதை இல்லை என்ற போதிலும் என் மனம் கவர்ந்த மாமேதை )
3.அர்த்த சாஸ்திரம்
( கௌடில்யர் என்ற சாணக்கியர் எழுதிய நீதிநூல்.கலாச்சாரம் சார்ந்த இவரது நீதிக்கொள்கைகள் இன்றைய சூழ்நிலையில் நம் இந்தியாவிற்கு உதவாது என்ற போதிலும் சிறந்த கருத்துக்களைக் கொண்ட நூல் இது )
4.வீடியோ நைட்ஸ் இன் காட்மன்ட் by pico iyar
( பீகோ ஐயர் என்னும் இந்த பயண மனிதர் உலகத்தில் சுற்றாத இடமே இல்லை எனலாம்.அத்தகைய மனிதர் இந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் என்ன நினைக்கிறார்கள் என்று கூறும்போது ச்சே! என்ன கொடுமை சரவணன் இது! என்று கூறத் தோன்றும்.இந்தியர்கள் அனைவரும் படித்து வெட்கப்பட வேண்டிய ( நமக்கு எப்போ அது இருந்திருக்கு ) அருமையான புத்தகம் )
5.ச்சே குவேரா
( லத்தீன் அமெரிக்க நாடுகளில் கம்யுநிச புரட்சியை ஏற்படுத்திய உண்மையான மாவீரன் ச்சே குவேரா. ஜீ ஸ்டுடியோ தொலைக்காட்சியில் தி மோட்டார் சைக்கிள் டைரிஸ் என்ற திரைப்படத்தைப் பார்த்து இப்புத்தகத்தை வாங்கினேன்.படித்ததும் புரிந்தது இந்த மனிதனைப் போல ஓரிருவர் இங்கு இருந்தால் போதும் இந்தியத் திருநாடு சொர்க்க பூமியைத் திகழும் என்று. நம் கண் முன்னே இந்தத் திருமகனின் உருவப் படம் பொறித்த சட்டைகளை அணிந்து கொண்டு அரைகுறையாக இவரைப் பற்றி மேடைகளில் பேசிக்கொண்டு திரியும் சில கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இவரின் பேருக்கே களங்கம் விளைவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை )
6.சிந்து முதல் கங்கை வரை
( இந்நூலை எழுதியவர் ம்ருதுளசான்கித்யயணன் இது முதலில் தேவநகரி எழுத்து வடிவில் வெளிவந்தது. எப்போது தெரியுமா? கி மு ஒன்றாம் நூற்றண்டில்.சுட்ட செங்கற்க்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் இந்தியாவில் முதலில் வெளிவந்த நாவல் ஆகும்.இதைப் படிக்கும் பொழுது இந்த அறிவியல் முன்னேற்றங்களை எல்லாம் விட்டு விட்டு கானகத்தில் வாசம் செய்ய எண்ணம் தோன்றும் என்பது திண்ணம் )
7.சிவா வாக்கியர் பாடல் தொகுப்பு
எல்லா பாடல்களையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.விளக்கம் பெற தேடல் இல்லை.எதோ என்னால் முடிந்த, புரிந்து கொள்ளக்கூடிய பாடல்கள் கீழே
கோவிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே.
வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்கிறீர்
வாயிலே குதப்பு வேதமென படக்கடவதோ
வாயில் எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!
கறந்தபால் முலைப்புகா,கடைந்த வெண்ணை மோர்புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே
8.குடும்பம் ( சீன நாவல் )
9.எட்வர்ட் தாட்சனின் மானுடபண்பாட்டியல்
10.ஆப்பிரிக்கா கண்டம் by மணியன்(இதயம் பேசுகிறது)